மேலும் செய்திகள்
வடமதுரையில் இருவர் பலி
11-Feb-2025
வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ரேஷன் கடை வேலைக்காக ரூ.70 ஆயிரம் கொடுத்து ஏமாந்த விதவை பெண் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார் .சேர்வைகாரன்பட்டி களத்து வீட்டை சேர்ந்த கருப்புச்சாமி மனைவி வேலுமணி 35. இரு ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கடையில் வேலையில் சேர திண்டுக்கல் நந்தவனம்பட்டியை சேர்ந்த இளங்கோவிடம் ரூ.70 ஆயிரம் கொடுத்தார். வேலை கிடைக்கவில்லை. இதனிடையே உடல்நலக்குறைவால் வேலுமணியின் கணவர் கருப்புச்சாமி இறந்துவிட்டார். இதனால் பண கஷ்டத்திற்குள்ளான வேலுமணி தனது பணத்தை திரும்ப பெற்று தர கோரி வடமதுரை போலீசில் புகார் செய்தார். 2024 டிசம்பரில் நடந்த விசாரணையில் பணம் பெற்றவர் ஒரு மாதத்திற்குள் பணத்தை திரும்ப தந்துவிடுவதாக கூறினார். பணம் வராததால் விரக்தியான வேலுமணி தனது இரு குழந்தைகளுடன் வடமதுரை போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் கண்ணன் மீண்டும் விசாரணையை துவக்கினார்.
11-Feb-2025