மேலும் செய்திகள்
பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
06-Mar-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் மாரத்தான், விளையாட்டு போட்டிகளுடன் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்தன. மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் செயலி 181 ஐ வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. எஸ்.பி., பிரதீப் துவங்கி வைத்தார். தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகே தொடங்கிய மாரத்தான் ஓட்டம் ஏ.எம்.சி., ரோடு, காட்டாஸ்பத்திரி, திருச்சி ரோடு வழியாக சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நிறைவடைந்தது.*திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறை சார்பில் மகளிர் தின விழா விளையாட்டுப் போட்டிகள் டி.ஆர்.ஓ., ஜெயபாரதிதலைமையில் நடைபெற்றது. அனைத்து துறை அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். திட்ட இயக்குனர் திலகவதி, தாசில்தார்கள் சுகந்தி, சந்தனமேரிகீதா முன்னிலை வகித்தனர்.* தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பாக பழநி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்க நிர்வாகி மணிமொழி தலைமை வகித்தார். வருவாய்துறை அலுவலர் சங்க நிர்வாகி மல்லிகா வரவேற்றார். மாவட்ட துணைச்செயலர் வேலம்மாள் முன்னிலை வகித்தார். மேயர் இளமதி பேசினார். அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் பொதுச் செயலாளர் தேவேந்திரன்,மாநில செயலாளர் கார்த்திகேயே வெங்கடேசன், மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, துணைத் தலைவர் கலந்து கொண்டனர்.*வேடசந்துார்: அமைதி அறக்கட்டளை, சமூக நலத்துறை, காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து உலக மகளிர் தினம், குழந்தைகள்,பெண்களுக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் விருதலைப்பட்டியில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் திவ்யா வரவேற்றார். மேலாளர் சீனிவாசன், வி.ஏ.ஓ., மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் சுகுணா, இளவரசி, ஐஸ்வர்ய சர்மிளா, ரஷிஹாஸ் ஸ்ரீ பேசினர்.
06-Mar-2025