உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஒரே ஆண்டில் ஒன்பது35 மாதங்களில் 17 கும்பாபிஷேகம்

 ஒரே ஆண்டில் ஒன்பது35 மாதங்களில் 17 கும்பாபிஷேகம்

பழநி,டிச.11- பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 17 கோயில்களுக்கு 35 மாதங்களில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் 2025 ல் மட்டும் ஒன்பது கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் 50-க்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன.2023 ஜன., 27ல் பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2025 டிச. 8 வரை 17 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதில் 2025 ல் மட்டும் கிரிவீதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வையாபுரி குளக்கரையில் பாதிரி விநாயகர் கோயில், கீரனுார் வாகீஸ்வரர் கோயில், சண்முக நதி தூர்நாச்சியம்மன் கோயில், பழநி நகர் பட்டத்து விநாயகர் கோயில், ஆயக்குடி சோளீஸ்வரர் கோயில், ரதவீதி லட்சுமி நாராயண பெருமாள் கோயில், கிரிவீதி வீரதுர்க்கை அம்மன் கோயில், அடிவாரம் திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை