உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 187 பேர் மனுக்கள் வாயிலாக முறையீடு

தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 187 பேர் மனுக்கள் வாயிலாக முறையீடு

திண்டுக்கல்: தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த கிராமமக்கள், வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பான வந்த 187 பேர் மனுக்கள் வாயிலாக கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர்.

காலிகுடங்களுடன் மனு

வேடசந்துாரையடுத்த மோர்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து அளித்த மனுவில், ஆதிதிராவிடர் காலனி பகுதியில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை 6 மாதங்களுக்கு முன்பு இடித்துவிட்டனர். புதிதாக தொட்டி கட்டித்தருவதாக ஊராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை கட்டித்தரவில்லை. பல கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்று குடிநீர் எடுத்துவரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.தங்கம்மாபட்டியை சேர்ந்த கிராம மக்கள் அளித்த மனுவில், அய்யலுார், பாகாநத்தம், சித்துவார்பட்டி, பாலக்குறிச்சி, ஸ்ரீராமபுரம், மலைப்பட்டி, சுற்று கிராமங்களில் வீடு இன்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை கேட்டு 300-க்கு மேற்பட்ட மனுக்கள் கொடுத்தோம்.இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இலவச வீட்டுமனை பட்டா வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி