உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை: மகிளா நீதிமன்றம் அதிரடி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அதிரடி

போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை: மகிளா நீதிமன்றம் அதிரடி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அதிரடி

திண்டுக்கல்:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.நிலக்கோட்டை அடுத்த விருவீடு தெற்கு வலையப்பட்டியை சேர்ந்தவர் நிதிஷ் 20. அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். விருவீடு போலீசார் நிதிஷை போக்சோவில் கைது செய்தனர்.இதன் வழக்கு திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. நிதிஷிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை , ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார். அரசு வக்கீலாக ஜோதி வாதிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !