உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விரைவில் 209 புதிய பஸ்கள் இயக்கம்

விரைவில் 209 புதிய பஸ்கள் இயக்கம்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மண்டலத்தில் விரைவில் 209 புதிய பஸ்கள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்'' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒட்டன்சத்திரம் முதல் புலிகுத்திக்காடு வரை கண்ணனுார் வழியாக நகர பஸ்சை மக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்து, தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது: மாவட்டத்தில் 200 பஸ்கள் விடியல் பயணத்திட்டத்திற்காக இயக்கப்படுகிறது. இத்திட்டத்தில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் பயணிக்கும் உதவியாளர், திருநங்கைகள் ஆகியோர் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டு அதன்படி ஒரு நாளைக்கு 2.73 லட்சம் பயனாளிகள் பயனடைகின்றனர். திண்டுக்கல் மண்டலத்தில் ரூ.141.50 கோடி மதிப்பீட்டில் 283 புதிய பஸ்கள் வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு திண்டுக்கல் மண்டலத்திற்கு 70 நகர பஸ்கள், 139 புறநகர் பஸ்கள் என 209 புதிய பஸ்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வெகு விரைவில் வரும் என்றார். ஆர்.டி.ஒ, கண்ணன், தாசில்தார் சஞ்சய்காந்தி, பி.டி.ஓ.,க்கள் பிரபு பாண்டியன், காமராஜ், போக்குவரத்து துறை மண்டல மேலாளர் முத்துகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை