மேலும் செய்திகள்
இலவச மனைப்பட்டா வழங்கல்
18-Oct-2025
திண்டுக்கல்: இலவச வீட்டுமனை பட்ட வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு வேலை வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 212 பேர் மனுக்கள் வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர். திண்டுக்கல்லில் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில்212 மனுக்கள் பெறப்பட்டன. வேடசந்துார், சின்னகூவக்காபட்டி மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 200-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்தோம். 15 குடும்பங்களை தவிர்த்து அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டது. 15 குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டா கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். வேலை வழங்குக திண்டுக்கல்லை அடுத்த சிலுவத்துாரை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான சிவசங்கரி, அவரது மாற்றுத்திறனாளி தம்பி சிவக்குமார், குடும்பத்தினருடன் கொடுத்த மனுவில், கணவரை இழந்து வாழும் தனக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். எனது சகோதரருக்கு திருமண நிதி உதவி வழங்க வேண்டும் எனகேட்டிந்தனர். திண்டுக்கல் மக்காச்சோளம், சோளம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கோடை மலைப்பயிர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் விதை சுத்திகரிப்பு நிலையத்துகான மானிய தொகை என ரூ.12 லட்சத்து 7 ஆயிரத்து 75 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
18-Oct-2025