22 கிலோ இறைச்சி பறிமுதல்
திண்டுக்கல்: திண்டுக்கல் , ரெட்டியார்சத்திரம், ஆத்துார், சின்னாளப்பட்டி பகுதி உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், முருகன், ஜோதிமணி தலைமையிலான குழுவினர சோதனை நடத்தினர். 72 கடைகளில் நடந்த சோதனையில் கெட்டுப்போன 22 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்து அழித்தனர். 17 கடைகளில் உணவு மாதிரிகள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன. 27 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.