நாய்கள் கடித்ததில் 25 ஆட்டுக்குட்டிகள் பலி
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொங்கப்பட்டியில் நாய்கள் கடித்ததில் 25 ஆட்டுக்குட்டிகள் இறந்தன.கொங்கபட்டியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். நாறபதாண்டுகளாக செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை குட்டிகளை பட்டியில் அடைத்து விட்டு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். அப்பகுதியில் திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து 25 ஆட்டுக்குட்டிகளை கடித்து குதறியதில் இறந்தன. மஞ்ச நாயக்கன்பட்டி கால்நடை டாக்டர் முகமது அனாஸ் பரிசோதனை செய்த பின் அவை அங்கேயே புதைக்கப்பட்டன.