மக்கள் நீதிமன்றத்தில் 2604 வழக்குகளுக்கு தீர்வு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2604 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார். நீதிபதிகள் வேல்முருகன், முரளிதரன், விஜயகுமார், சரண் உடனிருந்தனர்.மாவட்டம் முழுவதும் 14 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த அமர்வுகளின் மூலம் மாவட்ட முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வரும் வழக்குகள், முன் வழக்குகள் என 2604 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 13 கோடி 87 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டதுநீதிபதிகள் தீபா, கோகுல கிருஷ்ணனர், சோசசுந்தரம், ரெங்கராஜ், ஆனந்தி, சவுமியா மாத்யூ, வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.