உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 323 கிலோ குட்கா பறிமுதல்

323 கிலோ குட்கா பறிமுதல்

வேடசந்துார்: வேடசந்துார் அய்யர்மடம் நெடுஞ்சாலையில் டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன், இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கரூர் – திண்டுக்கல் நோக்கி வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 11 பெட்டிகளில் 323 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. லாரியுடன் 323 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் ஈரோடு குமாரபாளையம் சுரேஷ் 36, கைது செய்யப்பட்டார். குட்காவை அனுப்பிய கோவை அன்னுார் பொன்ராஜை 42, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை