தொழிலாளியை குத்திய 4 பேர் கைது
திண்டுக்கல்: ரெட்டியப்பட்டி அருகே ஆர்.எம்.டி.சி.,காலனியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மணிகண்டன் 26. நண்பர்களுடன் சிறுமலை பிரிவு அருகே மதுக்குடித்தார். அங்கு வந்த பொன்னகரத்தைச் சேர்ந்த ராம்குமார் 23, ஜான்பாண்டியன் 26, விஜயபாண்டி 27, என்.ஜி.ஓ.,காலனியை சேர்ந்த சிவபாண்டி 27, ஆகியோர் தகராறு செய்தனர். அப்போது கத்தியால் மணிகண்டனை குத்தினர். தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.