உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்: 4 பேர் கைது

சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்: 4 பேர் கைது

குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் தனியார் தோட்டத்தில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.குஜிலியம்பாறை பகுதியில் விவசாய நிலங்களில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மரங்களை சமூக விரோதிகள் சிலர் இரவு நேரங்களில் வெட்டி கடத்தி செல்கின்றனர். டி.எஸ்.பி., பவித்ரா தலைமையிலான தனிப்படை போலீசார் குஜிலியம்பாறை மல்லபுரம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது மல்லபுரம் ரோட்டோரம் நின்ற வேனை சோதனையிட்டனர். அதில் சந்தன மரங்கள் இருப்பதை கண்டனர்.விசாரணையில் சேர்வைக்காரன்பட்டி பகுதி தனியார் தோட்டத்தில் சந்தனம் மரங்களை வெட்டி கடத்தியது தெரியவந்தது. அய்யலுார் வேங்கனுார் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம், ரஞ்சித், கவுதம் ஆகியோரை கைது செய்து சந்தன மரங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை