உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மீண்டும் துவங்கப்பட்ட ரிங்ரோடு பணி எதிர்த்து போராடிய 5 விவசாயிகள் கைது

 மீண்டும் துவங்கப்பட்ட ரிங்ரோடு பணி எதிர்த்து போராடிய 5 விவசாயிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் ரிங்ரோடு பணிகளை மீண்டும் துவங்கியதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் தாமரைப்பாடியிலிருந்து செட்டியப்பட்டி வரை ரிங்ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிக்கு நிலம் இழந்த விவசாயிகளுக்கு மறுமதிப்பீட்டின் அடிப்படையில் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கேட்டு விவசாய சங்கத்தினர் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கலெக்டர் சரவணனை சந்தித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை அடிப்படையில் மறுமதிப்பீடு செய்யும் வரை ரிங்ரோடு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜன.7ல் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கல் வருவதையொட்டி, ரிங்ரோடு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ரிங்ரோடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரோட்டில் திடீர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில்,அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 5 விவசாயிகளை வடமதுரை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், ரிங்ரோடு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்ட ஒருங்கிணைப்பாளரான மா.கம்யூ., சரத்குமார் தலைமையில் திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை