உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 5வது ஜீனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள்

5வது ஜீனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள்

நத்தம்: திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம்,என்.பி.ஆர்., கல்விக்குழுமம் இணைந்து நடத்திய 5வது ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் நடந்தது. நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழும தடகள மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளின் முதல் நிகழ்வாக தடகள வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஷாட்-புட், ஈட்டி எறிதல் போன்ற பிரிவுகளில் பிரிவுகளில் நடைபெற்றது. போட்டியில் திண்டுக்கல் ஆர்ட்ஸ் டிரஸ்ட் தடகள கிளப் 136 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும், பழநி பாரத் வித்யா பவன் பள்ளி 83 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தையும் பிடித்தது. அனைத்து பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்களும், பாராட்டுச்சான்றிதழும், போட்டிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கமும், என்.பி.ஆர்., கல்லூரி கல்விக்குழுமமும் செய்திருந்தனர். அனைத்து மாவட்டங்களின் ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டிகளில் வெற்றி பெறும் தடகள வீரர்,வீராங்கனைகள் இம்மாதம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையேயான ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கல்நது கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை