உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 6 உரக்கடைகளுக்கு தடை

6 உரக்கடைகளுக்கு தடை

பழநி:திண்டுக்கல் மாவட்ட வேளாண் இயக்குனர் கோவிந்தராசு, உதவி இயக்குனர் ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையில் பழநி பாலசமுத்திரம், பாப்பம்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது விதிமீறலில் ஈடுபட்டதாக பாப்பம்பட்டியில் 4, கணக்கன்பட்டியில் 2 என மொத்தம் 6 கடைகளுக்கு 21 நாட்கள் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என உரக்கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி