உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதியதில் 6 பேர் காயம்

தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதியதில் 6 பேர் காயம்

கோபால்பட்டி: கோவையிலிருந்து சாணார்பட்டி, நத்தம் வழியாக காரைக்குடிக்கு சென்ற அரசு பஸ்சை, தேவகோட்டையைச் சேர்ந்த கேசவன் 50, ஓட்டினார். சுரேஷ் கண்டக்டராக சென்றார். அந்த பஸ் கோபால்பட்டி கால்நடை மருந்தகம் அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில், சுரேஷ் மற்றும் 5 பயணியர் படுகாயம் அடைந்தனர். குறுகிய அகலமே உள்ள சாலையில் இந்த தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த தடுப்புச் சுவரில் மோதி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !