உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் நகரில் 6000 மரக்கன்றுகள்

திண்டுக்கல் நகரில் 6000 மரக்கன்றுகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் பசுமையை அதிகரிக்க 6000 மரக்கன்றுகளை நடவு செய்ய வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.திண்டுக்கல் நகரில் தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் வனத்துறை நிர்வாகம் 6000 மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் தலைமையிலான அதிகாரிகள் குமிள்,புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளின் நாற்றுகளை நடவு செய்து அதை கன்றுகளாக உருவாக்கி உள்ளனர். இதை தொடர்ந்து நகரில் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான இடங்களை மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியோடு கண்டறிந்து விரைவில் மரக்கன்றுகள் நடவு செய்ய உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை