உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வன விலங்கு வேட்டை 7 பேருக்கு அபராதம்

வன விலங்கு வேட்டை 7 பேருக்கு அபராதம்

வடமதுரை: கோவிலுார் அருகே ஆர்.புதுக்கோட்டை அய்யா மலைக்கரடு முருகன் கோயில் பகுதியில் திண்டுக்கல் வன பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். வனப்பகுதிக்குள் வேட்டையாடுவதற்காக சுற்றித்திரிந்த பாகாநத்தம் பகுதி கிராமங்களான மலைப்பட்டி, குண்டாம்பட்டியை சேர்ந்த கனகராஜ், சக்திவேல் உட்பட 7 பேரை பிடித்து அய்யலுார் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணை நடத்திய திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் 7 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ 1.40 லட்சம் அபராதம் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை