மேலும் செய்திகள்
கனவு இல்லம்; எளிதாகிறது கடன் வசதி
08-Dec-2024
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.லட்சக்கணக்கில் பெற்ற கடனை திருப்பி தராததால் முன்னாள் வங்கி ஊழியர் பாலமுருகனை கடத்தி கை, கால்களை கட்டி கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் பாலமுருகன். இவர் திண்டுக்கல் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த கார்த்திக்குமார் 46, முள்ளிப்பாடி திருப்பதி 36, ஆர்.எம்.காலனி முத்துக்குமார் 28, பொன்மாந்துறை முன்னாள் ராணுவ வீரர் ஜெஸ்டின்ராஜா 34, மேட்டுப்பட்டி சார்லஸ் 34, அம்மாபட்டி பன்னீர்செல்வம் 28, விக்னேஷ் 32, ஆகியோரிடம் ரூ.லட்சக்கணக்கான பணத்தை கடனாக பெற்று அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.அவர்களும் அதை நம்பி கடனை கொடுத்தனர். பல மாதங்களாகியும் பாலமுருகன் கடனையும், வட்டியையும் கொடுக்கவில்லை. கடன் கொடுத்தவர்கள் கேட்டும் பாலமுருகன் ஏமாற்றி வந்தார்.இதனால் ஆத்திரமடைந்த ஜெஸ்டின்ராஜா உள்ளிட்ட 7 பேரும் பாலமுருகனை டிச., 5 கடத்தி 3 நாட்களாக கஸ்டடியில் வைத்து சித்ரவதை செய்து நேற்று முன்தினம் திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் கண், கை, கால்களை கட்டி கொலை செய்து வீசினர். போலீசார் விசாரித்து 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
08-Dec-2024