மேலும் செய்திகள்
மரம் விழுந்து 7 பேர் காயம்
10-Feb-2025
திண்டுக்கல்; திண்டுக்கல் பழைய நீதிமன்ற கட்டடத்தில் அரசு நர்சிங் கல்லுாரி மாணவியர் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி படிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவியரை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்கப்படுகிறது.நேற்று மதியம் மாணவியரை பார்க்க உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். மதியம், 12:30 மணிக்கு அவர்கள் அந்த வளாகத்திலிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த போது, அங்கிருந்த கொன்றை மரம் விழுந்தது.இதில், மதுரை, வாடிப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி, 65, கொட்டப்பட்டியை சேர்ந்த பயிற்சி மாணவி கீர்த்தனா, 20, உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். அழகர்சாமிக்கு கால் முறிந்தது.அமைச்சர் பெரியசாமி, அங்கிருந்த வழக்கறிஞர்கள், தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
10-Feb-2025