உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரை அருகே ரிங் ரோடு பணியை தடுத்த 8 பேர் கைது

வடமதுரை அருகே ரிங் ரோடு பணியை தடுத்த 8 பேர் கைது

வடமதுரை : திண்டுக்கல் முள்ளிப்பாடியில் இருந்து அடியனுாத்து வரை 19.5 கி.மீ., ரிங் ரோடு அமைக்கப்படுகிறது. ரோடு அமைக்க விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பெரியகோட்டை பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பில்லமநாயக்கன்பட்டி திருவேங்கடம், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான விவசாய கிணற்றை மூடி சாலை அமைக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் நிர்வாகி சரத்குமார் 35, திருவேங்கடத்தின் குடும்பத்தினர் கிணற்றின் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன் புகாரில் வடமதுரை போலீசார் சரத்குமார், பில்லமநாயக்கன் பட்டி கேசவமூர்த்தி 43, கணேசன் 45, அழகர்சாமி 47, ராஜ்குமார் 40, உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இதன் பின் ் கிணறு மூடப்பட்டு ரோடு அமைக்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை