பிளஸ் 1ல் 93.08 சதவீதம் தேர்ச்சி
திண்டுக்கல்: பிளஸ்1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியானதில் திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டங்களை சேர்ந்த 10,079 மாணவர்கள், 11596 மாணவிகள் என 21,675 பேர் தேர்வெழுதினர். 8,993 மாணவர்கள், 11,183 மாணவிகள் என 20,176 பேர் தேர்ச்சி அடைந்தனர். 89.23 சதவீத மாணவர்கள், 96.44 சதவீதம் மாணவிகள் என 93.08 சதவீத தேர்ச்சியுடன், திண்டுக்கல் மாவட்டம் மாநில அளவிலான தேர்ச்சிப் பட்டியலில் 14 வது இடம் பிடித்தது.