உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யலுார் கோயில் திருவிழாவில் வினோத நேர்த்திக்கடன்

அய்யலுார் கோயில் திருவிழாவில் வினோத நேர்த்திக்கடன்

வடமதுரை:அய்யலுார் தீத்தாகிழவனுாரில் காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா ஜூன் 1 இரவு கரகம் பாலித்தலுடன் துவங்க பூக்குழி இறங்குதல், மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்த நிலையில்,பழைய சாதத்தை துடைப்பத்தில் தொட்டு உறவினர் தலையில் அடிக்கும் வினோத நேர்த்திக்கடன் வழிபாடும் நடந்தது.இவ்விழாவின் இறுதி நாளான நேற்று சேத்தாண்டி வேடம் எனும் வினோத நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் அம்மன் தரிசனம் முடித்து தங்களது உடலில் சேறு, கரி பூசிக்கொண்டு கோயில் மைதானத்தில் அமர்ந்தனர். கழனீர் தொட்டியில் இருந்து சேகரித்த பழைய சாதத்தை மண் பானைகளில் ஊற்றி துடைப்பத்தை கொண்டு பழைய சாதத்தில் தொட்டு பக்தர்கள் மீது அவர்களது உறவினர்கள் அடித்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் பின் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோயில் குளத்தில் குளித்தனர். வினோத நேர்த்திக்கடன் மூலம் சகிப்புத்தன்மை அதிகரித்து, சண்டை, சச்சரவுகள் இன்றி உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னோர்களின் ஏற்பாடாக இந்த வழிபாடு நடப்பதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை