உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

சாணார்பட்டி: சாணார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு கோயிலில் பெண் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் 27.இவர் கத்தார் நாட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சாணார்பட்டி அருகே புங்கம்பாடியை சேர்ந்த சரண்யாக்கும் காதல் ஏற்பட்டது. கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றபின்பும் தொலைபேசியில் காதலை தொடர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன் நாடு திரும்பிய பாஸ்கர் நேற்று புங்கம்பாடி வந்தார். இருவரும் வெளியே சுற்றி விட்டு வீடு வந்துள்ளனர். இதையறிந்த புங்கம்பாடியில் கணவருடன் வசிக்கும் பாஸ்கரின் சகோதரி கண்டித்துள்ளார். இதனால் இருதரப்பு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காதல் ஜோடி சாணார்பட்டி மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது. பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை