உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அவசியமாகிறது ஆய்வு: மக்கள் நலனுக்காக பலகாரக்கடைகளை உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்ய வேண்டும்

அவசியமாகிறது ஆய்வு: மக்கள் நலனுக்காக பலகாரக்கடைகளை உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்ய வேண்டும்

மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் பட்டாசு ,துணி ,பலகார கடைகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதில் பட்டாசு கடைகள் முறையான அனுமதி பெற்று வைக்கப்படுகிறது. புதிய துணிகளை வசதிக்கேற்ப பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.திடீரென முளைத்துள்ள இனிப்பு, பலகார கடைகளில் செய்யப்படும் பலகாரங்கள் பழைய எண்ணெய் ,தரம் இல்லாத பொருட்கள் கொண்டு செய்யப்படுகிறதா என்பதை மக்களாகிய நாம்தான் சற்று கவனத்துடன் வாங்க வேண்டும். தரம் இல்லாத பொருட்கள்,தடை செய்யப்பட்ட நிறைமூட்டிகளால் செய்யப்படும் பொருள்களால் உடல் உபாதைகள் ஏற்படும். தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படும். இதை தவிர்க்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் புதிதாக தோன்றிய திடீர் பலகார கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். முறையான வகையில் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா, காலாவதி தேதி குறிப்பிட்டப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். தவறிய கடைக்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivagiri
அக் 17, 2025 11:09

அணைத்து உணவகங்களிலும், மற்றும் பலகாரக் கடைகளிலும், அங்கே சமையலுக்கு, பலகாரங்கள் தயாரிக்க என்ன எண்ணெய் உபயோகிக்கப் படுகின்றன என்பதை தெளிவாக எழுதி வைக்க வேண்டியது அவசியம், சும்மா வெஜிடபிள் ஆயில் என்று போடாமல், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் - என்பதை தெளிவாக போட வேண்டியது அவசியம், பாக்கெட்டுகளிலும், என்ன எண்ணெய் உபயோகிக்கப் பட்டுள்ளது என்பதும் தெளிவாக போட வேண்டியது அவசியம் ,


Kalyanaraman
அக் 17, 2025 08:42

அரசு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் வாங்குவார்கள். ஆய்வு செய்த பின் ஆய்வுக்கு உட்பட்ட பொருளில் குறை இருப்பின் அதற்கு ஆய்வு செய்த அதிகாரிகள் தான் முழு பொறுப்பு. அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் பொறுப்பு ஏற்கும் வகையில் சட்டத்தை மாற்ற வேண்டும். நமது கையாலாகாத சட்டங்களை வைத்துக் கொண்டு என்ன செய்தாலும், எல்லாமே மேலும் மேலும் லஞ்சம் வாங்குவதற்கு தான் வழிவகுக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை