உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கைவிடப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணி

கைவிடப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணி

திண்டுக்கல்: திண்டுக்கல்- - தாடிக்கொம்பு ரோட்டில் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிந்து ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்- - தாடிக்கொம்பு ரோட்டில் கண் மருத்துவமனைக்கு எதிரே நந்தவனம் ரோடு உள்ளது. இதை ஒட்டிய கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கனமழை நேரத்தில் ரோட்டில் மழைநீரும் சாக்கடை கழிவுநீரும் தேங்கி நின்றது. பொது சுகாதாரத்துக்கு கேடு ஏற்படுத்தும் விதமாக இருந்ததால் கழிவுநீர் கால்வாயை துார்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் மாநகராட்சி பணியாளர்கள் துார்வாரும் பணி மேற்கொண்டனர். கால்வாயில் கிடந்த மண், கல், பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டு ரோட்டின் ஓரத்திலேயே குவித்து வைக்கப்பட்டது. இயந்திரம் பழுதானதால் துார்வாரும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இரண்டு வாரங்களாகியும் கழிவுநீர் கால்வாய்காக தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் பணிகளும் கைவிடப்பட்டுள்ளது. ரோட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண் குவியல் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயமாக உருவெடுத்து உள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடித்து ரோட்டை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி