வடமதுரையில் விபத்து பள்ளத்திற்கு விடிவு
வடமதுரை: வடமதுரையில் டூவீலர்களை பாடாய்படுத்திய விபத்து பள்ளம் தினமலர் செய்தி எதிரொலியாக மூடப்பட்டது.வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செங்குறிச்சி ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருபக்கமும் வர்த்தக நிறுவனங்கள் மண் நிரப்பி உள்ளதால் மழை நேரத்தில் ரோட்டில் பாயும் நீர் வேகத்தடை பகுதியில் தேங்குவதால் விரைவில் இப்பகுதி ரோடு சேதமடைந்து பள்ளமாகிறது. உயரமான வேகத்தடையும், அதன் அருகிலே மெகா பள்ளமும் இருப்பதால் டூவீலர்கள் நிலை தடுமாறி அதிகளவு விபத்தில் சிக்கின. இது தொடர்பாக தினமலர் நாளிதழ் 'இன்பாக்ஸ்' பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத் துறையினர் ரோடை தார் கலவை கொண்டு சீரமைத்தனர். இதனால் இவ்வழியே டூவீலர், கார், கனரக வாகனங்களில் கடந்து செல்வோர் நிம்மதியடைந்தனர்.