உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடுகளில் திரியும் கால்நடைகளால் விபத்து அதிகரிப்பு! அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாகிறது

ரோடுகளில் திரியும் கால்நடைகளால் விபத்து அதிகரிப்பு! அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாகிறது

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் முக்கிய ரோடுகள்,நான்கு வழி சாலைகள், நெடுஞ்சாலைகள்,ரயில் பாதைகளில் கூட சுதந்திரமாக உலா வரும் கால்நடைகளால் விபத்தில் சிக்கி, அவ்வப்போது உயிரை விடுகின்றன. ரோட்டோரம் கொட்டப்படும் குப்பையை கிளறி பாலித்தீன் துணிகள் போன்றவற்றை சாப்பிடுகின்றன. இதனால் மாடுகளுக்கு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக நகர் புறங்களில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாததாலும், உணவு பற்றாக்குறையாலும் அதன் உரிமையாளர்கள் மாடுகளை கண்டு கொள்வதில்லை. அவை நடுரோட்டில் கூட்டமாக திரிவதால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். கை,கால் இழப்பு முதல் உயிரிழப்புகள் வரை நிகழ்கிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள் ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளை பறிமுதல் செய்கின்றனர். உரிமையாளர்கள் வரும் போது எச்சரித்து மாடுகளை ஒப்படைக்கின்றனர். இருப்பினும் உரிமையாளர்கள் மாடுகளை முறையாக பராமரிக்காமல் மீண்டும் ரோடுகளில் திரியவிடுகின்றனர். கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் ரோடுகளில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு கால்நடைகளையும் அதனால் ஏற்படும் விபத்துகளையும் தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SUBRAMANIAN P
ஆக 05, 2024 13:42

சத்தியமா எந்த அரசு அதிகாரியும் இது சம்பந்தமா ஒரு துரும்பையும் கிள்ளி போடமாட்டாங்க. யாரு செத்தா என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை