உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

திண்டுக்கல்: பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்திய இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல், பேகம்பூர் பள்ளப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் செல்வம் 41. 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதேபோல் வேடசந்துார் மாரம்பாடி அருகே பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த அருண்குமார் 34, எரியோடு பகுதியில் தம்பதியை தாக்கி 2 பவுன் நகை பறித்தார். அருண்குமாரை எரியோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பொது ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்துகொண்ட இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., பிரதீப் கலெக்டர் சரவணனுக்கு பரிந்துரைத்தார். அதன்படி கலெக்டர் உத்தரவில் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை