உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடிகர் விஜய் பிரதமர் பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேச்சு

நடிகர் விஜய் பிரதமர் பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேச்சு

திண்டுக்கல்: நடிகர் விஜய், பிரதமர் பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது என திண்டுக்கல் அருகே நடந்த விநாயகர் சிலை விசர்ஜன ஊர் வலத்தில் கலந்துகொண்ட, திரைப்பட சண்டை பயிற்சி யாளர் கனல் கண்ணன் பேசினார். திண்டுக்கல், தாடிக்கொம்பு பகுதியில் இந்து முன்னணி சார்பில் 30க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை விசர்ஜன நிகழ்ச்சி நடந்ததில், சிறப்பு விருந்தினராக கனல் கண்ணன் பேசியதாவது: கோயில் உண்டியலில் போடும் பணம் எங்கு போகிறது என தெரியவில்லை. அது மாற்று சமூகத்தினர் வெளிநாடு களுக்கு செல்ல நிதியாக வழங்கப்படுகிறது. ஆகவே, கோயில் உண்டியலில் பணம் போடாமல், வேலை செய்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து நிருபர் களிடம் கூறியதாவது: நடிகர் விஜய், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்னது அரசியலுக் காகத்தான். எல்லாம் ஓட்டுக்காக சொல்வதுதான். தமிழக முதல்வர் எல்லோருக்கும் பொதுவானவர். அவர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லாதது வருத்தமாக இருக்கிறது. தாய்லாந்து மன்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை கோயிலில் கொண்டாடுகிறார். வெளிநாட்டில் மக்களுக்கு உள்ள ஹிந்து உணர்வு தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் ஈ.வெ.ரா., பேரன்கள் என்பதால் தான். த.வெ.க., மாநாடு விஜய்க்கு சிறிய கரும்புள்ளியை ஏற்படுத்தி உள்ளது. சீமான் பேச்சை கண்டு கொள்வது இல்லை. அவர், இன்று ஒன்று, நாளை ஒன்று என பேசுவார். அரசியல் தலைவர் களுக்கு கொள்கை பிடிப்பு வேண்டும். அது அவரிடம் கிடையாது. பிரதமரை பற்றி விஜய் ஏன் பேசினார் என தெரியவில்லை. பா.ஜ.,வை எதிரி போல் சித்தரிக்கிறார். உலகத் தலைவர்களின் பட்டியலில் முதலிடத்தில் மோடி இருக்கிறார். எல்லா மதத்தினருக்கும் பொதுவானவராக இருக்கிறார். எந்த மதத்தையும் தாழ்வாக பேசவில்லை. இந்தியாவின் மதம், ஹிந்து மதம் என கூறியுள்ளார். அதற்காக முஸ்லிம்களை எதிர்க்கிறார் என கூறுவது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் குறித்து மட்டும் விஜய் பேசவில்லை, அனைத்து திராவிட கட்சி களையும் பேசியிருக்கிறார். அவர், பிரதமரை பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை