உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நெரிசலை சமாளிக்க ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் கவுன்டர்

நெரிசலை சமாளிக்க ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் கவுன்டர்

திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை திறக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் 70க்கு மேலான ரயில்கள் வந்து செல்கின்றன. பயணிகளும் இங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளி மாவட்ட,மாநிலங்களுக்கு செல்கின்றனர். நாளை மறுநாள் தீபாவளி கொண்டாட இருப்பதால் திண்டுக்கல்லிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை நேற்று முதல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவது அதிகரித்துள்ளது.ஏற்கனவே ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் டிக்கெட் வழங்குவதற்காக 2 முன்பதிவு அல்லாத டிக்கெட் கவுன்டர்,1 முன்பதிவு டிக்கெட் கவுன்டர் என 3 கவுன்டர்கள் உள்ளன. தற்போது வரும் நெரிசலை சமாளிக்க முடியாமல் அங்கிருக்கும் ரயில்வே ஊழியர்கள் திணறும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் பயணிகளும வரிசையில் 3 கவுன்டர்களிலும் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை இருந்தது.இதைத்தடுத்து பயணிகள் நலனுக்காக ரயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதலாக டிக்கெட் கவுன்டர்கள் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை