உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., தொடக்க விழா

அ.தி.மு.க., தொடக்க விழா

நத்தம் : அ.தி.மு.க., தொடக்க விழாவை முன்னிட்டு நத்தம் பஸ் ஸ்டாண்ட் அருகில் அ.தி.மு.க., ஜெ பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, மணிகண்டன், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர்கள் ஜெயபாலன், சுப்பிரமணி, இணைச் செயலாளர் விஜயன்,மாவட்ட கவுன்சிலர் சின்னாக்கவுண்டர், அவைத்தலைவர்கள் பிறவிக்கவுண்டர், சேக்ஒலி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் வேம்பார்பட்டி ஹரிகரன், ரமேஷ்பாபு, நகர்பொருளாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய அணி தலைவர் செல்லையா கலந்து கொண்டனர்.வேடசந்துார்: வேடசந்துாரில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான்போஸ் தலைமை வகித்து கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் பாபு சேட், நிர்வாகிகள் ஆறுமுகம், சந்திரசேகர், வேளாங்கண்ணி பங்கேற்றனர் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் தலைமை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வடமதுரை :அய்யலுாரில் நகர செயலாளர் டி.சி.ஆர்.,ராகுல் பாபா கொடியேற்றினார்.அவை தலைவர் பழனியப்பன், மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் செல்லப்பாண்டி, நகர பொருளாளர் ஆறுமுகம், ஐ.டி.,பிரிவு நகர தலைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் செந்தில் குமார், மாவட்ட பிரதிநிதி முருகன், எம்.ஜி. ஆர்., மன்ற செயலாளர் சுப்பையா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை