மழை கால நோய்கள் தவிர்க்க ஆலோசனை
வடமதுரை: மழை கால நோய்களில் பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன் அறிவுறுத்தியுள்ளார் அவர் கூறியதாவது : வடமதுரை வட்டாரப் பகுதிகளில் தற்போது விட்டுவிட்டு மழை பெய்கிறது. மலைப்பகுதி கிராமங்களில் சீதோஷ்ண நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, மழை காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி உள்பட பலவித நோய்கள் மக்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, மழை கால நோய்களில் இருந்து தப்பிக்க, வீடுகள், ஓட்டல்கள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் குடிநீரை கொதி நிலை வரை காய்ச்சி, பிறகு ஆற வைத்து குடிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் ஆட்டுக்கல், தேங்காய் சிரட்டை, டயர்கள், பிளாஸ்டிக் பைகளில் மழை நீர் தேங்கி நிற்பதை தடுப்பதால் மூலம் கொசு உற்பத்தியை குறைக்கலாம். சுற்றுப்புறங்களில் கழிவு நீர், குப்பைகள் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். காய்ச்சல் என்றால் அரசு மருத்துவ நிலையங்களுக்கு செல்ல வேண்டும்' என்றார்