உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

வேடசந்துார்:வேடசந்துார் சட்டசபை தொகுதியில் செப்.25 ல் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார். அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து வேடசந்துார் பேரூர் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பேரூர் செயலாளர் பாபுசேட் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜான்போஸ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் டாக்டர் பரமசிவம், தென்னம்பட்டி பழனிச்சாமி ஆலோசனை வழங்கினர். அம்மா பேரவை செயலாளர் பூக்கடை ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை