உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

வேடசந்துார் : வேடசந்துாரில் மேற்கு ஒன்றியம் ,நகரம் சார்பில் 2026 சட்டசபை தேர்தல் ஓட்டுச்சாவடி வாரியாக வாட்ஸ் ஆப் குழு அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜான் போஸ் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் பாபு சேட் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி பேசினர். ஓட்டுச்சாவடி வாரியாக 9 பேர் கொண்ட வாட்ஸ் ஆப் குழு அமைப்பது, 500 பேர் முதல் 1000 பேர் வரை வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது, தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றாத பல்வேறு தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் சந்திரசேகர், ராமலிங்கம், வேளாங்கன்னி, கருப்புச்சாமி, செந்தில் பங்கேற்றனர். எரியோடு: கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் எரியோட்டில் நடந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் தலைமை வகித்தார். நகர செயலாளர் அறிவாளி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பழனிச்சாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி