உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., தேர்தல் பயிற்சி கூட்டம்

அ.தி.மு.க., தேர்தல் பயிற்சி கூட்டம்

நத்தம் : நத்தம் அரசு அம்மா திருமண மண்டபம்,கோபால்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பயிற்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை வகித்தார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சின்னு, மணிகண்டன், சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர்கள் சுப்பிரமணி, ஜெயபாலன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இளம்வழுதி முன்னிலை வகித்தனர். நகர அவைத் தலைவர் சேக்ஒலி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனை வழங்கினார். மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ஹரிஹரன், அவைத்தலைவர் பிறவிக்கவுண்டர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சின்னாக்கவுண்டர், சி.ஆர்.ராஜேந்திரன், கோபால்பட்டி விஜயன் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் தினேஷ்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ