இளம் அறிவியலார் பட்டம் வென்ற அக் ஷயா மாணவர்
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் சி. பிரகதீஸ்வர் கிருஷ்ணா தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், காந்திகிராமம் கிராமிய பல்கலை இணைந்து ஏற்பாடு செய்த இளம் அறிவியல் திட்டம் 2025 பயிற்சி பட்டறையில் பங்கேற்றார். இதில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உதவியால் புதிய ரோபட் ஒன்றினை உருவாக்கி இளம் அறிவியல் பட்டத்தை பெற்று அடுத்த நிலை பயிற்சிக்கு தேர்வாகி உள்ளார்.இவரை பள்ளிச் செயலர் பட்டாபிராமன், முதல்வர் சவும்யா பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினர்.