விவசாய நில பாதைகள் ஆக்கிரமிப்பு விவசாய குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
பழநி: விவசாய நில பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த விவசாய குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர். ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமையில் நடந்த இதில் தாசில்தார் பிரசன்னா, வேளாண் உதவி இயக்குனர் கவுசிகாதேவி முன்னிலை வகித்தனர். விவசாயிகள் விவாதம்:மகுடீஸ்வரன், காவலப்பட்டி: ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பிரச்னை தொடர்பாக இ நோட்டீஸ் வழங்கப்படாமல் உள்ளதுஆர்.டி.ஓ.,: இந்த பிரச்னை தொடர்பாக குழு அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும்.கனகராஜூ, ஆர்.வாடிப்பட்டி: ஏழைகளுக்கு வழங்கப்பட்ட உபரி நிலத்தை சிலர் அபகரித்து வருகின்றனர். விலை கொடுத்து வாங்கி விடுகின்றனர். இவ்வாறு வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாஆர்.டி.ஓ.,: நிலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தாசில்தார் அனுமதியுடன் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யலாம்.முருகேசன் ,கரிகாரன்புதூர்: தோட்டத்திற்கு செல்லும் சாலை தனிநபரால் ஆக்கிரமிப்பப்பட்டு உள்ளது. இதனை அகற்ற வேண்டும்.ஆர்.டி.ஓ.,: சர்வே செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.காளிதாஸ், பெரியம்மாபட்டி:இரவிமங்கலம், சித்திரேவு பகுதிகளில் உபரி நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.டி.ஓ.,: நடவடிக்கை எடுக்கப்படும்.மகுடீஸ்வரன், காவலப்பட்டி: பெரியம்மாபட்டி, காவலப்பட்டி, ஆர்.வாடிப்பட்டி, கிராமத்தில் செங்கல் சூளை, சேம்பர் அதிகமாக உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படுகின்றன. இயற்கை வளங்கள் மாசுபடுகிறது. போதிய மைழ கிடைப்பதில்லை. வனவிலங்குகள் குடிநீர், உணவு தேவைக்காக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களை சேதப்படுத்துகிறது. ெங்கல் சூளை, சேம்பர்களை உரிமங்களை ஆய்வு செய்ய வேண்டும். வனவிலங்குகளில் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.டி.ஓ: தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.