உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இதையும் கவனியுங்க சார்.. : கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள்: தனியாக வருவோரை கடித்து குதறுவதால் அச்சம்

இதையும் கவனியுங்க சார்.. : கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள்: தனியாக வருவோரை கடித்து குதறுவதால் அச்சம்

நத்தம்: -திண்டுக்கல் மாவட்டத்தில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது, வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, வீடுகளில் வளர்க்கும் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை கடித்து கொல்வது, நடந்து செல்வோரை துரத்தி குதறுவது என இதன் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த மக்களும் குரல் எழுப்பியும் எதையும் கண்டுக்காது உள்ளாட்சி துறை வேடிக்கை பார்க்கிறது.மாவட்டத்தில் நகர், புற நகர், கிராமப் பகுதி ரோடு தெருக்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதை கண்டாலே மக்கள் பதறும் நிலை தொடர்கிறது. ரோடுகளில் படுத்திருக்கும் நாய்கள் டூவீலர் ஓட்டிகளை கண்டாலே விரட்டி விரட்டி கடிக்க பாய்கிறது . தனியாக நடந்து செல்வோரை கண்டாலே துரத்துவது,கடித்து குதறு வது ஏன நாய்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஒன்று முதல் ஐந்து பேர் வரை அந்தந்த பகுதி மருத்துவ மனைக்கு நாய்கடியால் சிகிச்சை பெற வருகின்றனர். நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தாலும் இதனை கட்டுப்படுத்த வேண்டிய உள்ளாட்சிகள் எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கிறது.நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் மக்களின் அலறலை கண்டுக்காமல் உள்ளது.இது ஒரு புறம் இருக்க சாலைகளின் குறுக்கே திடீரென புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவமும் அதிகம் நடக்கிறது. பஸ், ரயில் ஏறுவதற்காக வேகமாக வரும் பயணிகளையும் நாய்கள் விரட்டி கடிப்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் கோழி, ஆடு, மாடுகளையும் நாய்கள் கடித்து கொன்று விடுகின்றன.............நடவடிக்கை எடுங்ககிராமப்புறங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது. இந்த நாய்கள் வீடுகளில் வளர்க்கும் கோழி, ஆடு, மாட்டின் கன்றுகளை கூட்டாக சேர்ந்து கடித்துக்குதறி கொன்று விடுகிறது. இதனால் ஆடு, மாடு கோழி வளர்ப்பதை கைவிடும் நிலையில் பலர் உள்ளனர். பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை கூட அச்சத்துடன் அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இது போன்ற நிலையை தவிர்க்க சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.பழனியப்பன், நத்தம் வட்டார காங்கிரஸ் தலைவர், நத்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Apposthalan samlin
ஜூலை 15, 2025 10:46

இன பெருக்கத்துக்கு ஆக கூட்டம் கூட்டமாக போகும் ஒரு மாசத்துக்கு பின்னர் நோர்மல் ஆகி வீடும்


kumaresan
ஜூலை 15, 2025 10:14

மதுரை மாணகிரி 4 மற்றும் 5 தெருக்களில் அருள் மலர் கான்வென்ட் பள்ளி அருகிலும் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் பல மாணவர்களையும் மக்களையும் கடித்து குதறியிருக்கிறது. ஆன்லைனில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்க வில்லை . தினமலர் மூலமாக முயற்சி செய்கிறோம் . நன்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை