வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இன்ப நிதி தலைமையில் கூட இனி கல்யாணங்கள் நடக்கும். சில ஆண்டுகளுக்குமுன் ஜெயின் அண்ணன் மகள் தலைமையிலும் பல கல்யாணங்கள் நடைபெற்றது வாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர்கள் இவர்கள்
நத்தம் : தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் இல்லத் திருமணவிழா துணைமுதல்வர் உதயநிதி தலைமையில் நத்தத்தில் நாளை (அக்.21) நடக்கிறது .நத்தம் மதுரை சாலை விளாம்பட்டி விலக்கில் உள்ள திருமண அரங்கில் நடைபெறும் திருமணம் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்,பி., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், தர்மராஜன், மோகன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா செய்து வருகின்றனர்.
இன்ப நிதி தலைமையில் கூட இனி கல்யாணங்கள் நடக்கும். சில ஆண்டுகளுக்குமுன் ஜெயின் அண்ணன் மகள் தலைமையிலும் பல கல்யாணங்கள் நடைபெற்றது வாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர்கள் இவர்கள்