உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குளங்களை நிரப்பும் காவிரிநீர் திட்டத்தை செயலாக்க போராட்டம் அறிவிப்பு; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மார்க்சிஸ்ட் ஆத்திரம்

குளங்களை நிரப்பும் காவிரிநீர் திட்டத்தை செயலாக்க போராட்டம் அறிவிப்பு; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மார்க்சிஸ்ட் ஆத்திரம்

குஜிலியம்பாறை: மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி காவிரி நீரை கொண்டு வந்து வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகா பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களிலும் நிரப்ப எந்த நடவடிக்கையும் இல்லாததால் மார்க்சிஸ்ட் மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது.சட்டசபை தேர்தல் போது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வடமதுரையில் பேசும் போது வறட்சிப் பகுதியான வேடசந்துார் தொகுதி மக்களின் நலன் கருதி, கரூர் காவிரி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் காவிரி நீரை கொண்டு வந்து வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகா பகுதிகளில் உள்ள அணைத்து குளங்களையும் நிரப்பி விவசாயம் செழிப்படைய செய்வோம் என வாக்குறுதி கொடுத்தார். அதையே அப்போதைய தி.மு.க .,வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏ., வுமான காந்திராஜன் மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்து வெற்றி பெற்றார். நான்கு ஆண்டுகள் முடிவுற உள்ள நிலையில் அதற்கான ஆய்வு பணி மட்டுமே நடந்துள்ளது. கிணற்றுக்குள் போட்ட கல்லாகவே உள்ளதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. எனவே தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி, ஜூன் 5 முதல் ஒரு வாரத்திற்கு குஜிலியம்பாறை ஒன்றியத்தின் கடை கோடியில் உள்ள லந்தகோட்டையில் இருந்து கூம்பூர் ஊராட்சி வரை பாதயாத்திரியை துவக்கி மக்களிடம் எடுத்துக் கூறவும், ஜூன் 15 முதல் 100 இடங்களில் தெருமுனைப் பிரசாரம் , மூன்றாவது கட்டமாக டி. கூடலுார் முதல் கோவிலுார் வரை, மனித சங்கிலி போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ