மேலும் செய்திகள்
அஷ்டமி வழிபாடு
02-Nov-2026
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மேற்கு ரத வீதி லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில் புனிதநீர் கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. பின் பூஜித்த புனிதநீரால் சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ்குமரன், கண்காணிப்பாளர் அழகர்சாமி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
02-Nov-2026