மாணவர்களுக்கு பாராட்டு
திண்டுக்கல்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக சோடோகான் கராத்தே சம்மேளனம் சார்பாக 2வது மாநில கராத்தே போட்டி நடைபெற்றது. 400க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கட்டா, குமித்தே, டீம் கட்டா போன்ற பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் ஒய்2எம்ஏ காடமி மாணவர்கள் கட்டா பிரிவில் 10 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை வென்றனர். குமித்தே பிரிவில் 4 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை வென்றனர். சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அகாடமி தலைமை பயிற்சியாளர் பிரசாத் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். எஸ்.எஸ். மருத்துவமனை டாக்டர் ஈஸ்வரகுமார் பேசினார்.