மேலும் செய்திகள்
டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி
02-Nov-2024
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டி ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ கல்லுாரியில் நடந்தது. பங்கேற்ற ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதல் இடத்திலும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் 2ம் இடத்தையும் பிடித்தனர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் முதல் இடத்தை பிடித்தனர். முதல் இடத்தைப் பிடித்த மாணவிகள் தேனி,கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இம் மாணவிகளை தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி,உடற்கல்வி ஆசிரியர் பியூலா ரோஸி, பயிற்சியாளர் நாட்டுத் துரை பாராட்டினர்.
02-Nov-2024