மேலும் செய்திகள்
அடிப்படை பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு?
7 hour(s) ago
பழநி : பழநி ஒன்றிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிவகிரிப்பட்டி ஊராட்சியில் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் பிரசன்னா பி.டி.ஒக்கள், வேதா,நளினா கலந்து கொண்டனர். கோதைமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் குறித்து அதிகாரிகள் , பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடாததால் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளவில்லை. அங்கு வந்த சிலர் பிரச்னைகளை கூறும் போது அதை கேட்க அதிகாரிகள் முன் வரவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் மக்கள் கூறிய பிரச்னைகள் பதிவு செய்யப்பட்டன.
7 hour(s) ago