உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீபாவளி வருவதால் பட்டாசு விபத்துகளை தவிர்க்க தேவை விழிப்புணர்வு: துறை அதிகாரிகள் கவனம் செலுத்துவது அவசியம்

தீபாவளி வருவதால் பட்டாசு விபத்துகளை தவிர்க்க தேவை விழிப்புணர்வு: துறை அதிகாரிகள் கவனம் செலுத்துவது அவசியம்

தீபாவளி என்றாலே சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசுகளை வெடிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி நெருங்குவதால் பலரும் வெளியூர்களிலிருந்து குறைந்த விலைக்கு பட்டாசுகளை தற்போதே தங்கள் வீடுகளில் வாங்கி வைக்கின்றனர். இதனால் வீட்டிலிருக்கும் பட்டாசுகளில் சிலநேரங்களில் நெருப்பு துகள்கள் எப்படியாவது பட்டு அவைகள் வெடித்து சிதறி வெடி விபத்துகள் நடக்கின்றன. இதனால் சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. நேற்று முன்தினம் பட்டாசுகளை வீட்டில் வாங்கி வைத்திருந்த வேடசந்துாரை சேர்ந்த ஒருவர்,புகை பிடிக்கும் போது அதன் நெருப்பு துகள்கள் பட்டாசில் பட்டு விபத்தில் சிக்கி இறந்தார். பட்டாசுகளை வீட்டில் தேக்கி வைக்ககூடாது என்றாலும் அதையும் ஒருசிலர் ஆபத்தை உணராமல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். தீயணைப்பு துறையினர் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கிராமம் கிராமமாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் தீபாவளியன்று குழந்தைகள் எப்படி பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும். விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிக்க வேண்டும். விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி என்பது குறித்தெல்லாமல் விளக்கம் கொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை