உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயிலில் அனைத்து தரிசன வழிகளிலும் மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் சஷ்டி,வார விடுமுறையால் ஏராளமானோர் குவிந்தனர்

பழநி கோயிலில் அனைத்து தரிசன வழிகளிலும் மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் சஷ்டி,வார விடுமுறையால் ஏராளமானோர் குவிந்தனர்

பழநி: பழநி முருகன் கோயிலில் சனிக்கிழமை வார விடுமுறை, சஷ்டி தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில் அனைத்து தரிசன வழிகளிலும் மூன்று மணி நேரம் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி முருகன் கோயிலில் நேற்று சனிக்கிழமை விடுமுறை, சஷ்டி தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். வின்ச், ரோப்கார் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் அனைத்து கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.பொது தரிசன வரிசை வழியில் செல்லும் பக்தர்களுக்கு அமர இடமில்லாமல் குடிக்கு குடிநீர் கூட இல்லாமல் சிரமம் அடைந்தனர். இங்குள்ள இலவச கழிப்பறைக்கான வழி இல்லாததால் அவதிப்பட்டனர். பாரவேல் மண்டபத்தில் இருந்து உள்பிரகார மண்டபம் செல்லும் வழியில் நெரிசலால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.பாத விநாயகர் கோயில் அருகே அலைபேசி பாதுகாப்பு மையம் குறைவாக உள்ளதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அலைபேசியை வழங்கி ,வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்க கூட்ட நேரங்களில் கூடுதல் மையங்கள் ஏற்படுத்த வேண்டும், பூங்கா ரோடு, இட்டேரி ரோடு, கிரி வீதியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலை, குறவன் பாறை ரோடு, அய்யம்புள்ளி ரோடு ஆகியவற்றில் தடீர் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க பக்தர்கள் தவித்தனர். பூங்கா ரோடு, கொடைக்கானல் செல்லும் சாலை ஆகியவற்றில் வாகனம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை