உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / என்.பி.ஆர்., ல் தடகளப்போட்டி ஜி.டி.என்., கல்லுாரிக்கு சாம்பியன்ஷிப்

என்.பி.ஆர்., ல் தடகளப்போட்டி ஜி.டி.என்., கல்லுாரிக்கு சாம்பியன்ஷிப்

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த தடகளப்போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் மதுரை காமாராஜர் பல்கலை கல்லுாரிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. டிச.5 ல் நடந்த துவக்க விழாவிற்கு மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன் தேசியக்கொடி , மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் பேராசிரியர் ஜெயவீரபாண்டியன் ஒலிம்பிக் கொடி , அமெரிக்கன் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன் கல்லுாரி கொடியை ஏற்றி வைத்தனர். மதுரை காமராஜர் பல்கலை உடற்கல்வித்துறை தலைவர் ரமேஷ் பேசினார்.400 மீட்டர் தடை பிரிவில் ஜி.டி.என்., கல்லுாரி மாணவர் ஏ.பிரேம்குமார் ,உயரம் தாண்டுதலில் ஜி.டி.என்., கல்லுாரி மாணவர் எஸ்.ரமேஷ்பாபு , வட்டு எறிதல் பிரிவில் ஜி.டி.என்., கல்லுாரி மாணவர் எஸ்.சித்தீஷ்வர் வெற்றபெற்றனர்.சுத்தியல் எறிதல் பிரிவில் ஜி.டி.என்., கல்லுாரி மாணவி ,உயரம் தாண்டுதலில் ஜி.டி.என்., கல்லுாரி மாணவி வெற்றி பெற்றனர்.நிறைவு விழாவிற்கு மதுரை காமராஷர் பல்கலை கல்வியியல் கமிட்டி உறுப்பினர் மயில்வாகனம் தலைமை வகித்தார்.எஸ்.எப்.ஆர்., கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் விஜயகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மயில்வாகனம் பரிசுகளை வழங்கினார்.மதுரை அமெரிக்கன் கல்லுாரி, 51 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றது.ஆண்கள் பிரிவில் தனி நபருக்கான சாம்பியன் பட்டத்தை அமெரிக்கன் கல்லுாரி மாணவன் ஷ்யாம் கோப்பையை பெற்றார்.பெண்கள் பிரிவில் லேடி டோக் கல்லுாரி கோப்பையை பெற்றனர்.பெண்கள் பிரிவில் ஜி.டி.என்., கல்லுாரி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.சாம்பியன் பட்டத்தை அருளானந்தர் கல்லுாரி மாணவி மாரிச்செல்வி பெற்றார். உடற்கல்வித்துறை பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை