உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மூதாட்டி மீது தாக்குதல்

மூதாட்டி மீது தாக்குதல்

வடமதுரை: தென்னம்பட்டி ஆண்டிபட்டியை சேர்ந்தவர் பார்வதி 62. இவரது வீட்டை மகன் துரைச்சாமி அதே பகுதி தண்டபாணிக்கு விற்றார். ஆனால் பார்வதி அந்த வீட்டிலேயே தங்கினார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேற மறுத்த பார்வதியை, வீட்டை வாங்கிய தண்டபாணி, அவரது மனைவி ரத்தினம், தாய் அன்னபூரணி ஆகியோர் தாக்கினர். காயமடைந்த பார்வதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்கியவர்களை வடமதுரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை